Archive for the ‘பொருள் குற்றம்’ Category

காது கொடுத்துக் கேட்டால் …

 காவல்காரன் படத்தில் வாலி எழுதிய “காது கொடுத்துக் கேட்டேன்” என்ற பாடலில் பொருள் குற்றம் கண்டு பிடித்தார்கள் ரசிகர்கள். “காது கொடுத்துக் கேட்டால், வயிற்றிலிருக்கும் குழந்தையின் ‘குவா குவா’ சத்தம் கேட்குமாமே? இப்படியும் ஒரு பாட்டா? கற்பனையில் கொஞ்சமாவது உண்மை வேண்டாமா?” என்று பேசும்படம் பத்திரிக்கையிம்  ரசிகர் ஒருவர்  கேள்வி எழுப்பியிருந்தார்.

கர்ப்பம் உற்றிருப்பவளின் மேல் விழுந்து புரளும் அளவிற்கு குஷி ஏற்பட்டுத் தன்னைத் தானே மறந்த அவனுக்கு, இப்படி ஒரு உணர்வு ஏற்பட்டிருக்கக் கூடுமோ” என்று பதிலளித்தார் பத்திரிக்கை ஆசிரியர்.