Archive for the ‘பருகிய கவிதைச் சுவை’ Category
22 Mar
அந்த மானைப் பாருங்கள் அழகு
தனக்கு பிடித்தமானதை
பிடித்துத் தருவான் என்று
தனக்கு பிடித்த மான் அதை
கேட்டாள்
– கவிஞர் வாலி
22 Mar
நிலநடுக்கம்
இவர்கள் கண்மூடிப்போனதால்
மண்மூடிப்போக வில்லை..
மண்மூடிப்போனதால்
கண்மூடிப் போனவர்கள்..
(குஜராத் நிலநடுக்கத்தின்போது வாலி எழுதிய வரிகள்)
8 Mar
பேசும் மரம்
மரம் பேசுவது போலான கவிஞர் வாலியின் கவிதையிது:
நம்மைக் கொண்டு எத்தனை
சிலுவைகள் செய்கிறார்கள்..
ஆனால் அவர்களுக்குள் ஒரு
இயேசுவைப் படைக்க முடிய வில்லையே!
– கவிஞர் வாலி