கவிஞர் வாலி ஏவிஎம் நிறுவனத்திற்காக எழுதிய முதல் பாடல் “சர்வர் சுந்தரம்” திரைப்படத்தில் இடம்பெற்ற “அவளுக்கென்ன அழகியமுகம்” என்ற பாடலாகும்.
பாடலின் காட்சியமைப்பில் நடித்துள்ள எம்.எஸ்.வி, டி.எம்.எஸ்.-ஐ பலரும் கவனித்திருப்பீர்கள். வாலிபனாக அரைக்கை சட்டை, பேண்ட் அணிந்து ஸ்டைலாக டி.எம்.எஸ்க்கு முன்பாக அமர்ந்து பாடல் வரிகளை சரிபார்க்கும் கவிஞர் வாலியை பலரும் கவனிக்க மறந்திருப்பீர்கள்.
ஒர் மாலை நேரத்தில் நிதானமில்லால் இருந்த வாலி, ஏவிஎம்.செட்டியார் முன்பாக வாய் நிறைய வெற்றிலை குதப்பியபடி எப்படியோ சமாளித்து அரைமணி நேரத்தில், எழுதிய பாடல்தான் இது. அதன் பின்னர் ஏவிஎம்மின் ஆஸ்தான கவிஞராக தொடர்ந்து 15 படங்களுக்கு பாடல்கள் எழுதினார் கவிஞர் வாலி.