கவிஞர் வாலியை புகழ்ந்து கவிஞர் மு.மேத்தா

நடையில் நின்றுயர் நாயகன் – கவிஞர் வாலி..

Image

இவ்வுளவு பெரிய நாயகனை நான் வாழ்த்தி
ஒரு கவிதை படிக்காவிட்டால்
என் தமிழ் துருப்பிடித்து போகும் …

வையமிசை வைகலன் வாடாது
அய்யன் வள்ளுவன் வகுத்தளித்த நூல்நடை
பால்நடை முப்பால்நடை
அந்த நூல்நடை பால்நடை -போல் நடை
வைகோ கால் நடை

கால்நடை மனிதர்களை கால்நடை மூலமாகத்தான்
மேல்நடை மனிதர்களாக மாற்ற முடியும்
என முன்பு எண்ணியவன்…சீன சிவப்பு சிந்தனையாளன் மா.வோ . மாவோவின் மறுபிறப்புத்தான் வைகோவோ…

நீ தடந்தோள்களில் கருப்பு துண்டு…
தாங்கி நடக்கும் நெருப்பு துண்டு..
ஆயினும் நீ எதையும் அவிக்க பிறந்தவனல்ல…
தென்புலத்தார் பெருமை தென் படாமல் கவிக்க பிறந்தாரை
கவிழ்த்து புகழ் குறிக்க பிறந்தவன் நீ …

வைகோ பேச்சை காதில் வாங்கினால் போதும்
வைக்கோல் கூட ஒரு தைகோள் போல
விறைத்து நிற்கும்
வீரம் இறைத்து நிற்கும்

வைகோவே …தமிழன்னை தலையில் வைக்கும் பூவே ..
நற்றமிழ் ஆங்கில நாளும் அமர்ந்திருக்கும் நாற்காலி உனது நாக்கு
அந்த நாக்களவு கூர்மை உன் மூக்கு..
இத்தகு கூர்மைகள் கூர்த்த மதியின் குறியீடுகள் ..
நல்ல குறியீடுகளுக்கு ஏது குறுக்கீடுகள் ??

தேர்ந்த குணாளனே…
என் நாற்பது ஆண்டுகால நகல்களின் தோய்ந்தவனே
நவிலர் தெரியதான நல்லியல்புகள் வாய்ந்தவனே
மாபெரும் மறுமலர்ச்சி பயணத்தில்
மழையில் நனைந்து
மதிய வெயிலில் காய்ந்தவனே
காலங்கள் பல நடந்து பாதங்கள் தேய்ந்தவனே

நீ நடந்து வருகையில் பூமரங்கள் வீசினவாமே சாமரங்கள் …
வைகோ …அது உன் ‘வேர்’ வைகோ ..
நீ நடந்து வருகையில் தரை இறங்கி நின்றனவாமே
தண்ணீர் மேகங்கள் ..
வைகோ அது உன் ‘பார்’ வைகோ

உயர்ந்த மனிதரே …ஒன்று நிச்சயம்
பூமி சிலிர்த்திற்கும் உன் பாதங்கள் தொட்டதாலே
நெஞ்சில் கவடுகள் இல்லாதவனின் காலடிச்சுவடுகள் பட்டதாலே..

என் நண்பனே… ஏறார்ந்த பண்பனே…
சிறைச்சாலையில் சில சாயங்கால வேளையில்
நீ பந்து விளையாடிய போது உன் நெஞ்சில் வந்து விளையாடியிருக்குமே
என் நினைவு..
அது எப்படி என்று சொல்லவா ..
அன்று நீ ஆடிய ஆட்டம் ‘வாலி’பால் அல்லவா …??

மக்கள் கடல் பின்தொடர ..மன்மிசை நடந்த மனித நதியே ..
நீ பாதங்களால் எழுதியிருக்கிறாய் பூமி தாளில் ஒரு புனித விதியே ..
பூகாயம் சீர்பட அதன் கோணல்கள் நேர்பட
வாழிய நீ பல்லாண்டு …!!!!

இந்த காணொளியை காண

நிஷ்காம்ய கர்மம்! – வாலி

‘கடவுள் இல்லை;
கடவுள் இல்லை;
கடவுள் இல்லவே இல்லை!’

-சிவாஜி, பிரபு நடித்த ‘சுமங்கலி’ என்னும் படத்தில் இந்தப் பாட்டு! எழுதியது நான்; இசையமைத்தது திரு.எம்.எஸ்.வி; பாடியது திரு. டி.எம்.எஸ்.

நாங்கள் மூவரும் அக்மார்க் ஆத்திகர்கள்.

பிரபு நடித்து – இந்தப் பாட்டு, தி.நகர் பஸ் நிலையம் அருகே இருக்கும் பெரியார் சிலை யைச் சுற்றிப் படமாக்கப்பட்டது, டைரக்டர் திரு.யோகானந்தால்!

கடுமையான கடவுள் நம்பிக்கை உடைய நானும், எம்.எஸ்.வி-யும்; டி.எம்.எஸ்-ஸும் இந்தப் பாடலை – நூறு விழுக்காடு ஈடுபாட்டோடு உருவாக்கினோம். இதற்குப் பெயர்தான் ‘நிஷ்காம்ய கர்மம்’. விருப்பு வெறுப்பின்றி – நமக்கிட்ட பணியைச் செவ்வனே செய்வது தான், ‘நிஷ்காம்ய கர்மம்’.

‘காலையில் தினமும்

கண் விழித்தால் நான்

கைதொழும் தெய்வம் அம்மா!’

- ‘நியூ’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை யில் நான் எழுதிய பாட்டு. ஒலிப்பதிவு எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் -

“வாலி சார்! எங்க மதத்துல, தெய்வத்தையும் தாயையும் ஒண்ணா சொல்லக் கூடாதும்பாங்க… ‘தெய்வம்’கிற வார்த்தைக்குப் பதிலா ஏதாவது சொல்லுங்க சார்!” என்று ரஹ்மானிடமிருந்து ஃபோன் வந்தது.

“ய்யோவ்! என்னய்யா நீ… இதெல்லாம் ஒரு தவறா எடுத்துண்டு… சரி… சரி… தெய்வம்கிறதுக்குப் பதிலா ‘தேவதை’ன்னு வெச்சுக்கோ!” என்று மாற்றிக் கொடுத்தேன்.

பரத்பூஷண், மீனாகுமாரி நடித்த படம் ‘பாய்ஜூபாவ்ரா’! ஓர் இந்துக் கவிஞனைப்பற்றியது.

அதில் ‘ஓ! பகவான்!’ என்று இந்துக் கடவுளை விளித்து – தர்பாரி கானடாவில் ஓர் அற்புதமான பாட்டு!

இசையமைத்தவர் திரு.நவுஷத் அலி; இசுலாமிய நோன்புகளிலிருந்து இம்மியளவும் விலகாதவர்.

இந்தப் பாடலைப் பாடியவர் உலகு புகழ் உஸ்தாத் திரு. படேகுலாம் அலிகான் அவர்கள். மூன்று காலங்கள் அநாயாசமாக சஞ்சாரம் செய்யவல்ல சாரீரம்!

நம்ம ஊர் திரு. ஜி.என்.பி-யே – படேகுலாம் அலிகான் கச்சேரியை, மியூசிக் அகாடமியில் கேட்டுவிட்டு -அவர் பாதங்களில் விழுந்து பரவியவர்.

திரு. நவுஷத் அலிக்கும், படேகுலாம் அலிகானுக்கும் சமயப்பற்று இல்லையா? ஆயினும் அவர்கள் கடைப்பிடித்தது – ‘நிஷ்காம்ய கர்மம்'; இந்தப் பாட்டோடு அவர்களுக்கு இருந்த சம்பந்தம், படத்தளவே!

திரு.பாலுமகேந்திரா இயக்கிய படம் – ‘ராமன் அப்துல்லா’. இந்தப் படத்தில் திரு. இளையராஜா இசையில், நான் ஒரு பாட்டு எழுதினேன்.

‘ஆண்டவன் எந்த மதம்?

இந்துவா? இசுலாமா? கிறித்துவமா?’

- என்று வரும் இந்தப் பாட்டை – முழுமுதற் கடவுளாக அல்லாவையே முப்பொழுதும் கருதி – அஞ்சு வேளை தொழுகை புரியும், திரு. நாகூர் அனிபா அவர்கள் பாடினார்கள்.

பாடல் வரிகளைப் பார்த்து, அவர் மறுக்கவில்லை; அற்புதமாகப் பாடினார், தானொரு தாமரை இலைத் தண்ணீராக இருந்து! இதுதான் ‘நிஷ்காம்ய கர்மம்’!

கும்பகோணம் திரு. ஏ.டி.சுல்தான் அவர்கள் அற்றை நாளில் ஓர் அருமையான கர்னாடக சங்கீத வித்வான்!

தியாகராஜரையும், தீட்சிதரையும் – அவர் பாடி நான் கேட்டிருக்கிறேன்!

கடையநல்லூர் திரு. மஸ்ஜீத் அவர்கள் முருகன் பாடல்களைப் பாடி – ஒலிப்பதிவு நாடாக்கள் வந்திருக்கின்றன!

மகாபாரதத்தில் ஒரு கதை. ஒரு மகா முனிவன், தருக்கும் செருக்கும் ஏறி நிற்பவன்-

ஒரு குடும்பப் பெண்ணிடம் குட்டுப்படுகிறான். அவள், எங்கோ இவன் ஒரு கொக்கைக் கொன்றதைப் பேசுகிறாள்.

‘தருமம் யாதென முழுமையாய்த் தான் அறியவில்லை’ என்று அந்த முனிவன் ஒப்புக்கொண்டு -

அதைத் தனக்குக் கற்பிக்கும்படி அந்தப் பெண்ணை வேண்டுகிறான்.

அவள் – ஒருவன் பெயரைக் குறிப்பிட்டு, அங்கு போய் அவனிடம் அறத்தை அறிந்துகொள் என்கிறாள்.

அந்தப் பெண் குறிப்பிட்ட தர்மிஷ்டனின் பெயர் ‘தரும வியாதன்'; அவனிடம் முனிவன் சென்று, தனக்கு தர்மத்தை உபதேசிக்க வேண்டுகிறான்.

‘இரு; என் வேலையைச் செய்துவிட்டு வருகிறேன்!’ என்று அவன் ஆட்டை வெட்டுகிறான்; ஆம்! அவன் கசாப்புக் கடை வைத்திருப்பவன்!

வேதபாராயணங்கள்; ஹோமங்கள்; ஆகியவற்றின் முடிவில் இந்துக்களால் உச்சரிக்கப்படுவது – ‘ஓம்! சாந்தி! ஓம்!’

இந்தப் பெயரில் வந்து பெரும் வெற்றி பெற்ற படத்தின் கதாநாயகன் – ஷாரூக் கான்; இயக்குநர் புகழ்வாய்ந்த CHOREOGRAPHER ஆன, ஒரு முஸ்லீம் பெண்மணி!

B.R.சோப்ராவின் புகழ்வாய்ந்த ‘மகாபாரதம்’ டி.வி. சீரியலுக்கு உரையாடல்கள் எழுதியவர் – மகா மேதையான ஓர் உருதுக் கவிஞர்!

சுருக்கமாக நான் சொல்ல வருவது என்னவென்றால்…

படங்களில் பாட்டுகள், வசனங்கள் எழுதப்படுவதெல்லாம் -

கதைகளில்

காணுகின்ற

சமயத்துக் கேற்றபடி;

சமயத்துக் கேற்றபடி அல்ல!

நன்றி: விகடன்

ரஜினி ரஜினிதான் – வாலி

மக்கள் திலகம் மறைவின்போது

திருமாவளவன் பொன்விழாவில்

திருமாவளவன் பொன்விழாவில் அன்று 16.8.12 மாலை 7 மணிக்கு கவிஞர் வாலி தலைமையில்கவியரங்கம் சிறப்பாக நடைபெற்றது.இதில் திரை உலக கவிஞர்கள் பழனிபாரதி ,கபிலன், இளையகம்பன், யுகபாரதி, அண்ணாமலை, தமிழமுதன், மற்றும் கலைப்புலி தாணு ஆகியோர் அற்புதமான கவிதைகளை வாசித்தனர்.

watch?v=BsK7XN06IMg&feature=player_embedded#!

தமிழீழம் பற்றிய கவிஞர் வாலியின் கவிதை

Follow

Get every new post delivered to your Inbox.